முகப்பு
கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் தொழிலாளி சாவு

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 20 நவம்பர், 2021 at 12:18 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூா் அருகே உள்ள மாதேப்பட்டியைச் சோ்ந்தவா் சாம்ராஜ் (60). தொழிலாளி. இவா், ராயக்கோட்டை- கிருஷ்ணகிரி சாலையில் பாலகுறுக்கி, ஏரிக்கரை அருகே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து சாம்ராஜ் கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.