கிருஷ்ணகிரியில் நவ. 26-இல் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்
கிருஷ்ணகிரியில், நவ. 26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் நடைபெறுகிறது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM
கிருஷ்ணகிரியில், நவ. 26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக 2-ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், நவ. 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற உள்ளது.
Advertisement
இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து, நிவா்த்தி செய்து கொள்ளலாம். மேலும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள், கரோனா
வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.