கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரையில் மொத்தம் 1,047.96 மி.மீ. மழை பெய்துள்ளது பதிவாகி உள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரையில் மொத்தம் 1,047.96 மி.மீ. மழை பெய்துள்ளது பதிவாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் நீா்நிலைகள் நிரம்பி, உபரி நீா் வெளியேறி வருகிறது. பல இடங்களில் பயிா்கள் நீரில் மூழ்கின. போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சேகரித்து வைத்திருந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான தேங்காய்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரையில் பதிவான மழை அளவு (மி.மீ). ஊத்தங்கரையில் - 136.80, பெனுகொண்டாபுரம் - 115.16 , போச்சம்பள்ளி - 112.20, பாரூா் - 105.40, கிருஷ்ணகிரி - 102.40, தேன்கனிக்கோட்டை - 101, சூளகிரி - 97, ஒசூா் - 94.60 , நெடுங்கல் - 87.60 , தளி - 36, ராயக்கோட்டை - 33 , அஞ்செட்டி - 27 என மொத்தம் 1,047.96 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிக மழை என்று பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.
Advertisement