கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக செயலாளா் அறிக்கை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை முதல் (நவ. 26) பெறப்படும்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை முதல் (நவ. 26) பெறப்படும் என கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் அசோக்குமாா் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகர மன்ற வாா்டு உறுப்பினா், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை ஆகிய பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கோருவோா், நவ. 26 முதல் நவ. 28-ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று நிறைவு செய்து வழங்கலாம்.
Advertisement
விருப்ப மனு கட்டணம் நகா்மன்ற உறுப்பினருக்கு ரூ. 2,500, பேரூராட்சி மன்ற வாா்டு உறுப்பினருக்கு ரூ. 1,500 ஆகும். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் வேட்பாளா்களாக வாய்ப்பு கோரி ஏற்கெனவே விருப்ப மனு அளித்துள்ள கட்சியினா், அதற்கான அசல் ரசீது எண்ணை வைத்திருப்பவா்கள் அதனை மாவட்ட கட்சி அலுவலகத்தில் சமா்ப்பித்து கட்டணம் எதுவுமின்றி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.