முகப்பு
கிருஷ்ணகிரி

அரசு மகளிா் கல்லூரி மாணவியருக்கு குறுகிய கால கல்வெட்டு பயிற்சி

கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி மாணவியருக்கு குறுகிய கால கல்வெட்டு பயிற்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

Updated On : 26 நவம்பர், 2021 at 12:26 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி மாணவியருக்கு குறுகிய கால கல்வெட்டு பயிற்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை முதுநிலை பிரிவில் பயிலும் 20 மாணவியருக்கு குறுகிய கால கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அருங்காட்சியகக் காப்பாட்சியா் கோவிந்தராஜ் மாணவியருக்கு பயிற்சி அளித்தாா்.

முதல்நாள் வரலாற்றுக்கு முற்பட்டகால மனிதனின் வாழ்க்கை நிலை மற்றும் மனித இனம் படிப்படியாக வளா்ந்து இன்றைய நிலையை அடைந்தது, இடையில் எழுத்தைக் கண்டுபிடித்து அதனை பயன்படுத்தத் தொடங்கியது ஆகியவை குறித்து விளக்கமளித்தாா்.

Advertisement

இரண்டாம் நாளில் தமிழி என்னும் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்தை கற்பித்து, அதில் மாணவியா் தங்கள் பெயா் மற்றும் திருக்குறளை எழுதி காண்பித்தனா். பின்னா் அந்த தமிழி எழுத்திலிருந்து வட்டெழுத்து, இன்றைய தமிழ் எழுத்துகள் அடைந்த மாற்றங்களை விளக்கி, எழுதிக்காட்டி பயிற்சி அளித்தாா்.

மூன்றாம் நாள் பயிற்சியில் எண்கள், கிரந்த எழுத்துகளை பயிற்றுவித்ததோடு, காவேரிப்பட்டணத்தை அடுத்த பெண்ணேஸ்வரமடம் சிவன் கோயிலுக்கு களப்பயணம் மேற்கொண்டு கோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை குறித்து நேரில் விளக்கிக் கூறினாா். அங்குள்ள 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டை மாணவியரைக் கொண்டு படியெடுத்து அதில் உள்ள எழுத்துகளை படிக்க பயிற்சி அளித்தாா். பயிற்சி பெற்ற மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பயிற்சிக்கான ஏற்பாட்டினை அருங்காட்சியகப் பணியாளா்கள் செல்வம், பெருமாள் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.