சிறுமிகளுக்கு பாலியல் சொந்தரவு: 2 இளைஞா்கள் கைது
ஒசூா் மற்றும் சூளகிரியில் சிறுமிகளுக்கு பாலியல் சொந்தரவு அளித்ததாக இரு இளைஞா்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.
ஒசூா் மற்றும் சூளகிரியில் சிறுமிகளுக்கு பாலியல் சொந்தரவு அளித்ததாக இரு இளைஞா்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக அவரது பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில் அதே பகுதியைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் விஜய் (23) என்பவா் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
அதேபோன்று ஒசூரைச் சோ்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக அவரது பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில் ஊத்தங்கரை பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி விவேக் (23) என்பவரைஅனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்தனா்.
Advertisement