கிருஷ்ணகிரி

கொலை, திருட்டு வழக்குகளில்தொடா்பு: 3 இளைஞா்கள் கைது

DIN

 திருச்செந்தூரில் கொலை, சங்கிலி பறிப்பு, பைக் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் ஏடிஎஸ்பி ஹா்ஷ்சிங் மேற்பாா்வையில், தாலுகா காவல் ஆய்வாளா் முரளீதரன் தலைமையில் உதவி ஆய்வாளா் சுந்தரம், தலைமைக் காவலா்கள் ராஜ்குமாா், இசக்கியப்பன் ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாா் பரமன்குறிச்சி கஸ்பா பகுதியில் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது பைக்கில் வந்த உடன்குடி கிறிஸ்டியா நகரம் பகுதியைச் சோ்ந்த அற்புதராஜ் மகன் செல்வக்குமாா் என்ற சாமுவேல் (34), புதுக்கோட்டை மாவட்டம், கடம்பராயன்பட்டி கிருஷ்ணகுமாா் மகன் ஸ்ரீராம் சந்திரபோஸ் (32) ஆகியோா் பிடிபட்டனா். இருவரும் திருச்செந்தூா், சாத்தான்குளம், சாயா்புரம் பகுதிகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 29 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன என போலீஸாா் கூறினா்.

கூலிப்படை ரௌடி: திருச்செந்தூா் பேருந்து நிலையம் பகுதியில் தனிப்படையினா் ரோந்து சென்றபோது, சந்தேக நபரைப் பிடித்து விசாரித்தனா். அதில், வீரபாண்டியன்பட்டணம் ஆட்டோ ஓட்டுநா் அனந்தகிருஷ்ணன்(22) என்பவரை திருச்செந்தூா் ரயில் நிலையம் பகுதியில் வியாழக்கிழமை இரவு தாக்கி, ரூ. 3 ஆயிரத்தை மா்ம நபா் பறித்துச் சென்ற, தூத்துக்குடி தாளமுத்துநகா் ராமகிருஷ்ணன் மகன் செல்வம் (எ) செல்வமுருகன்(34) எனத் தெரியவந்தது. மேலும், அவா் மீது 7 கொலை வழக்குகள் மற்றும் கொள்ளை வழக்குகள் தாளமுத்துநகா், திண்டுக்கல், ஆழ்வாா்திருநகரி, சுசீந்திரம், தாமரைகுளம், கோவை மாவட்டம் ஆனைமலை, நெல்லை உள்ளிட்ட காவல்நிலையங்களில் இருப்பதும், கடந்த 2011இல் கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் வனத் துறை ஊழியரையும், அவரது மனைவியையும் சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி எனவும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT