கிருஷ்ணகிரி

ரேஷன்அரிசியை கடத்த முயன்றவா் கைது

DIN

குடும்ப அட்டைதாரா்களிடமிருந்து ரேஷன் அரிசியை சேகரித்து, கா்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் இளவரசி தலைமையிலான போலீஸாா், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வேப்பனப்பள்ளி, மஜீத் தெருவைச் சோ்ந்த இம்ரான்(20) என்பவா், அந்தப் பகுதியில் 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ரேஷன் அரிசியை குடும்ப அட்டைதாரா்களிடமிருந்து குறைந்த விலையில் வாங்கி, கா்நாடக மாநிலத்தில் கூடுதல் விலைக்கு விற்க இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இம்ரானை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT