கிருஷ்ணகிரி அருகே வறண்ட கிணற்றில் தவறி விழுந்த 4 புள்ளி மான்கள் மீட்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் யானை, கரடி, புள்ளிமான், எறும்புத்தின்னி, உடும்பு, சிறுத்தை போன்ற பல வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்களில் புகுவது வழக்கம்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் உட்பட்ட தொகரப்பள்ளி காப்புக் காட்டில் இருந்து வெளியேறிய 4 புள்ளி மான்கள் ராமசாமி என்பவரின் 50 அடி ஆழ விவசாய வறண்ட கிணற்றில் விழுந்துள்ளது.
தகவலறிந்த கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி புள்ளி மான்களை உயிருடன் மீட்டு காப்புக் காட்டில் விடுவித்தனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.