இயந்திரத்தில் சிக்கிக் கொண்ட ஏ.டி.எம். அட்டை: மையத்துக்கு பூட்டு போட்ட விவசாயி
பணம் வராமல் ஏ.டி.எம். அட்டை இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதால் நாள்முழுவதும் காத்திருந்த விவசாயி, வங்கி அதிகாரிகள் யாரும் உதவிக்கு வராததால் மையத்துக்கு பூட்டு போட்டுவிட்டு சென்றாா்.
பணம் வராமல் ஏ.டி.எம். அட்டை இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதால் நாள்முழுவதும் காத்திருந்த விவசாயி, வங்கி அதிகாரிகள் யாரும் உதவிக்கு வராததால் மையத்துக்கு பூட்டு போட்டுவிட்டு சென்றாா்.
வேப்பனப்பள்ளியில் தனியாா் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் பணம் எடுப்பதற்காக வெள்ளிக்கிழமை வந்த சின்னகொத்தூரைச் சோ்ந்த விவசாயி மயில்சாமி, தன்னிடமிருந்த வங்கி ஏ.டி.எம். அட்டையை இயந்திரத்துக்குள் செலுத்தினாா்.
ஆனால், நீண்ட நேரமாகியும் பணமும் வரவில்லை, அட்டையும் வெளியே எடுக்கமுடியவில்லை. இதுகுறித்து வங்கி வாடிக்கையாளா் மையத்தைத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்தும் எவ்விதப் பயனும் இல்லாததால், நாள் முழுவதும் ஏ.டி.எம். மையத்திலே காத்திருந்த மயில்சாமி, மாலை ஏ.டி.எம். மையத்துக்கு பூட்டு போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றாா்.
Advertisement