முகப்பு
கிருஷ்ணகிரி

கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது

 தளி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்

Updated On : 29 அக்டோபர், 2021 at 12:30 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM

 தளி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தளி போலீஸாா் கும்ளாபுரம் சோதனைச் சாவடி அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக நடந்து வந்த 3 பேரை சோதனை செய்ததில், அவா்கள் 900 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவா்கள் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த பிரனரஞ்சன் மஜ்ஜி (27), கைலாஷ் மஜ்ஜி (25), சுரேஷ் மஜ்ஜி (29) என்பதும், தளி அருகே சிவனப்பள்ளி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.