தேய்பிறை அஷ்டமி பூஜை
கிருஷ்ணகிரியை அடுத்த கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM
கிருஷ்ணகிரியை அடுத்த கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம், பூா்ணாஹுதி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, காலபைரவா் உற்சவமும், பரணி தீபமும் ஏற்றப்பட்டது. பக்தா்கள் வெண்பூசணியில் விளக்கேற்றி தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.
இதில், கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.
Advertisement