மது விற்ற இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா்ந்து சட்ட விரோதமாக மது விற்று வந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா்ந்து சட்ட விரோதமாக மது விற்று வந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், கனகமுட்லுவையடுத்த தண்ணீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த வெள்ளையன் (எ) லோகநாதன் (24), ஒசூா், மத்திகிரி சிப்பாய்பாளையம் பகுதியைச் சோ்ந்த எல்லப்பா (38) ஆகிய இருவரும் சட்ட விரோதமாக தொடா்ந்து மது விற்பனையில் ஈடுபட்டு வந்தனா். இவா்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்தாா். இந்த பரிந்துரையை ஏற்ற கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், அவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement