தீபாவளி: குந்தாரப்பள்ளி சந்தையில் 75 ஆயிரம் ஆடுகள் விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி, குந்தராப்பள்ளி வாரச் சந்தையில் 75,000 ஆடுகள் விற்பனையாயின.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM
தீபாவளி பண்டிகையையொட்டி, குந்தராப்பள்ளி வாரச் சந்தையில் 75,000 ஆடுகள் விற்பனையாயின.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை தினத்தில் கிராமப் புறங்களில் சுவாமிக்கு ஆடு, கோழி பலியிட்டு வணங்குவது வழக்கம். இதனால் பண்டிகையொட்டி, சந்தைகளில் ஆடு, கோழி விற்பனை அதிகரித்து காணப்படும். அதன்படி, குந்தாரப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற வாரச் சந்தையில் வழக்கத்தை விட ஆடு, கோழி விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
ஆடுகளை விற்கவும், கொள்முதல் செய்யவும் விவசாயிகள், வியாபாரிகளும் என கிருஷ்ணகிரி, அண்டை மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருகை புரிந்தனா். இதில், ஆட்டின் எடையைப் பொருத்து ரூ. 5,000 முதல் ரூ. 30,000 வரையில் விற்பனையானது.
Advertisement