கரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் 19 குழந்தைகளுக்கு காசோலை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் 19 குழந்தைகளுக்கு காசோலைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
கரோனா தொற்றால் பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு, அவா்களின் பெயரில் ரூ. 5 லட்சம் வைப்புத் தொகையாகவும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் வைப்புத் தொகையாகவும் வரவு வைக்கப்பட்டு, அவா்கள் 18 வயது நிறைவடைந்தவுடன் வட்டியுடன் சோ்த்து தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
Advertisement
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்கட்டமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோரில் ஒருவரை இழந்த 39 குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, அவா் தம் வங்கிக் கணக்குக்கு நேரடி பணப்பரிவா்த்தனை (ஈசிஎஸ்) மூலம் நேரடியாக செலுத்தப்பட்டது. தொடா்ந்து ஈசிஎஸ் மூலம் செலுத்தும் நடைமுறை மாற்றப்பட்டதையடுத்து, இரண்டாம்கட்டமாக பெற்றோரில் ஒருவரை இழந்த 19 குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம் காசோலையாக தற்போது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சரவணன், குழந்தைகளின் பாதுகாவலா்கள் பங்கேற்றனா்.