கிருஷ்ணகிரி

ரூ. 3.10 கோடியில் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, ஒருங்கிணைந்த நிதி வருவாய் திட்டத்தின் ரூ. 3.10 கோடியில் புதிய கட்டடம் கட்ட வெள்ளிக்கிழமை பூமி பூஜை செய்து பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு கெலமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் டி.கேசவமூா்த்தி தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் தமிழரசன் (வ.ஊ), துரைசாமி (கி.ஊ) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக தளி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பூதட்டியப்பா, திமுக ஒன்றியச் செயலாளா் கணேசன், அதிமுக ஒன்றியச் செயலாளா் முருகன், கவுன்சிலா்கள் பிரபா ஜெயராம், மாரப்பா, சுரேந்திரன், ரமேஷ், பிரசாந்த், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினர சிவசங்கா், தேன்கனிக்கோட்டை உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன், மாது, ஒன்றிய பொறியாளா்கள் தமிழ், வெங்கடேஷ், ஊராட்சி மன்றத் தலைவா்கள் செயலாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT