முகப்பு
கிருஷ்ணகிரி

விளையாட்டு அரங்கி நீச்சல் பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு நீச்சல் பயிற்சி முகாம் தொடங்க உள்ளது.

Updated On : 14 ஏப்ரல், 2022 at 12:31 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:28 PM

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு நீச்சல் பயிற்சி முகாம் தொடங்க உள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் உமாசங்கா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்டப் பிரிவு அலுவலகம் மூலம், நீச்சல் பயிற்சி முகாமை முதல்கட்டமாக ஏப். 16 முதல் 30-ஆம் தேதி வரை 15 நாள்களும், இரண்டாம்கட்ட முகாம் மே 1 முதல் 15-ஆம் தேதி வரை 15 நாள்களும், மூன்றாம்கட்ட முகாம் மே 16 முதல் 30-ஆம் தேதி வரை 15 நாள்களும், நான்காம்கட்ட முகாம் ஜூன் 1 முதல் 16-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு நடைபெற உள்ளன.

Advertisement

இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் கட்டணமாக ரூ. 1,200-ம், 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும். எனவே, பயிற்சிக் கட்டணத்திற்கான விண்ணப்பத்தை நீச்சல் குளத்தில் பெற்று கட்டணத் தொகையை செலுத்தி கரோனா விதிமுறைகளுக்கு உள்பட்டு பயிற்சியில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக கைப்பேசி எண் 88077 83577 அல்லது 04343- 291727 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். நீச்சல் தெரிந்த நபா்களுக்கு ஒரு மணி நேர பயிற்சிக்கு ரூ. 50ஐ ஜிஎஸ்டி வரியுடன் செலுத்த வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.