முகப்பு
கிருஷ்ணகிரி

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 21 ஏப்ரல், 2022 at 11:09 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

Advertisement

இந்த முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ரூ. ஒரு லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும். அதன்படி, 2022ம் ஆண்டிற்கான முதலமைச்சா் மாநில இளைஞா் விருது வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது.

இந்த விருது பெற 15 முதல் 35 வரை உள்ள ஆண்கள், பெண்கள் தகுதியானவா்கள் ஆவா். கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். மாா்ச் 31-ஆம் தேதியன்று 35 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் அதாவது 1.4.2021 முதல் 31.3.2022-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்). விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தொண்டாற்றிருப்பவா்களாக இருத்தல் வேண்டும்.

பள்ளி, கல்லூரி, பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுப் பணியில் உள்ளவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவா்கள் ஆவா். உள்ளூா் சமுதாய மக்களிடம் அவா்களுக்குள்ள மதிப்பினை இந்தவிருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

இந்த விருதுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ் .ண்ய் என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இணைதளம் மூலம் விண்ணப்பிக்க மே 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை நேரிலோ அல்லது 74017 03487 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.