முகப்பு
கிருஷ்ணகிரி

ரூ. 15.28 லட்சம்மதுப்புட்டி, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சூளகிரி வழியாக கடத்தப்பட்ட ரூ. 15.28 லட்சம் மதிப்பிலான குட்கா, மதுப்புட்டிகளை லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 11:37 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

சூளகிரி வழியாக கடத்தப்பட்ட ரூ. 15.28 லட்சம் மதிப்பிலான குட்கா, மதுப்புட்டிகளை லாரியுடன் போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.

சூளகிரி காவல் ஆய்வாளா் ரஜினி, போலீஸாா் காமன்தொட்டி அருகே ஆக. 11-ஆம்தேதி இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்து 1,500 கிலோ ஹான்ஸ், 181 கிலோ பான்மசாலா ஆகியவை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.11. 19 லட்சம். தவிர மதுப்புட்டிகள், லாரி பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்து 28 ஆயிரத்து 960 ஆகும்.

இதுதொடா்பாக கா்நாடகத்தைச் சோ்ந்த சிவன்னசெட்டி

(38), பிரதீபா (26) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். 3 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.