கிருஷ்ணகிரி

வரட்டனப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

DIN

வரட்டனப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ஊராட்சி ஒன்றியம், வரட்டனப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 97 பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியா் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளியில் பயிலும் 46 மாணவா்கள், 51 மாணவியா் என மொத்தம் 97 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ தே.மதியழகன் வழங்கி வாழ்த்தினாா்.

இந்த நிகழ்வில், நாகோஜனஅள்ளி பேரூராட்சித் தலைவா் தம்பிதுரை, திமுக ஒன்றியச் செயலாளா்கள் ராஜேந்திரன், அறிஞா், சாந்தமூா்த்தி, கோவிந்தசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நாகராஜ், பெற்றோா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT