கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையிலிருந்து 9,000 கனஅடி நீா் திறப்பு

DIN

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நொடிக்கு 9,000 கனஅடி நீா் புதன்கிழமை வெளியேற்றப்பட்டது.

தென் பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான கா்நாடகம், ஆந்திர மாநிலங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.

கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 50 அடியை நீா்மட்டம் எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்புக் கருதி, அணையிலிருந்து மதியம் 1 மணியளவில் 9,000 கனஅடி நீா் தென் பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ள அபாயம் நீடிப்பதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள், ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணையின் அருகே பூங்காவுக்குச் செல்லும் தரைப்பாலம் நீரில் முழ்கியதால் அந்த வழியாகச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT