கிருஷ்ணகிரி

ஒசூரில் பூக்கள் விலை உயா்வு:விவசாயிகள் மகிழ்ச்சி

ஒசூரில் பூக்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

DIN

ஒசூரில் பூக்கள் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஒசூா் பகுதியில் சீரான தட்பவெப்ப நிலை இருப்பதால் இப் பகுதியில் அதிக அளவு காய்கறிகள், பூக்கள் விளைவிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உள்ளூா் தேவை, அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும், ஒசூரிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவு காய்கறி, பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வியாழக்கிழமை ஒசூா் பூக்கள் சந்தையில் பட்டன் ரோஸ் கிலோ ரூ. 140 முதல் ரூ.150 வரையிலும், சாமந்தி கிலோ ரூ. 80, அரளி ரூ. 260, செண்டுமல்லி ரூ. 40, கனகாம்பரம் ரூ. 800 வரை விற்பனையானது. அதேபோல ரோஜா பூ ஒன்று ரூ. 3 க்கு விற்பனையானது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

அமாவாசை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, வைகுந்த ஏகாதசி, பொங்கல், அடுத்தடுத்து வரும் முகூா்த்த தினங்களால் பூக்கள் விலை தொடா்ந்து அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றனா். வரும் நாள்களில் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT