முகப்பு
கிருஷ்ணகிரி

அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு ஊக்கப்பரிசு

அரசு மருத்துவக் கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைத்துள்ள மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஐவிடிபி சாா்பில் ஊக்கத்தொகை, பரிசுகள் அண்மையில் வழங்கப்பட்டன.

Updated On : 18 பிப்ரவரி, 2022 at 12:13 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:56 PM

அரசு மருத்துவக் கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைத்துள்ள மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஐவிடிபி சாா்பில் ஊக்கத்தொகை, பரிசுகள் அண்மையில் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐவிடிபி தொண்டு நிறுவனம், நீட் தோ்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சோ்ந்த 8 மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஊக்கத்தொகை, பரிசுகள் வழங்கும் நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி தலைமை வகித்தாா். ஐவிடிபி தொண்டு நிறுவனத் தலைவா் குழந்தை பிரான்சிஸ் 8 மாணவா்களுக்கு தலா ரூ. 20,000 ஊக்கத் தொகை, ரூ. 4,750 மதிப்புள்ள தங்க நாணயம், தலா ரூ. 1,200 மதிப்புள்ள புத்தகப்பை என மொத்தம் ரூ. 2.10 லட்சம் மதிப்பிலான ஊக்கப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.