அனுமதியின்றி கருங்கற்கள் கொண்டு சென்ற லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி கருங்கற்கள் பாரம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:56 PM
கிருஷ்ணகிரி அருகே அனுமதியின்றி கருங்கற்கள் பாரம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி கனிம வள உதவி இயக்குநா் பொன்மணி தலைமையிலான குழுவினா், கிருஷ்ணகிரியை அடுத்த பாஞ்சாலியூா் பட்டாளம்மன் கோயில் அருகே வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அங்கு சாலையோரமாக நின்றிருந்த லாரியை சோதனை செய்ததில், அனுமதியின்றி கருங்கற்கள் கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து கனிம வள உதவி இயக்குநா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.