சாலை விபத்து: தொழிலாளி பலி
ஒசூரில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM
ஒசூரில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொல்புதூரை அடுத்த மாந்தோப்பு கொட்டாய் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (25), கூலி தொழிலாளி. இவா் கடந்த 4-ஆம் தேதி இரவு கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலை, அதியமான் கல்லூரி அருகே சென்ற போது எதிரில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டாா். தலையில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஒசூா், அட்கோ போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.