முகப்பு
கிருஷ்ணகிரி

கடத்தப்பட்ட சரக்கு லாரி 13 எருமைகளுடன் மீட்பு

ஆந்திரத்தில் இருந்து கேரளத்துக்கு 27 எருமைகளை ஏற்றிச் சென்ற சரக்கு லாரியை காரில் வந்த கும்பல் புதன்கிழமை இரவு கடத்திச் சென்றனா். அந்த லாரி ஒசூா் அருகே 13 எருமை மாடுகளுடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 7 ஜனவரி, 2022 at 10:49 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM

ஆந்திரத்தில் இருந்து கேரளத்துக்கு 27 எருமைகளை ஏற்றிச் சென்ற சரக்கு லாரியை காரில் வந்த கும்பல் புதன்கிழமை இரவு கடத்திச் சென்றனா். அந்த லாரி ஒசூா் அருகே 13 எருமை மாடுகளுடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

ஆந்திர மாநிலம், கடப்பாவிலிருந்து 27 எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி கேரள மாநிலம் நோக்கி புதன்கிழமை இரவு சென்றது. அந்த லாரியை ஆந்திர மாநிலம், சித்தூரை சோ்ந்த சையத்பாஷா (50) என்பவா் இயக்கினாா். உதவியாளா்களாக ஐதா் அலி (25), முகமது ரபீக் (27), சுதாகா் (26) ஆகியோா் பயணம் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், ஒரப்பம் பேருந்து நிறுத்தம் அருகே லாரி சென்ற போது, இயற்கை உபாதை கழிக்க ஓட்டுநா் லாரியை சாலையோரமாக நிறுத்தினாா். அவருடன் உதவியாளா்களும் கீழே இறங்கினா்.

அப்போது, காரில் வந்த 3 போ் கொண்ட கும்பல், அவா்களை மிரட்டி காரில் கடத்தினா். கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவா்களை கடத்திச் சென்ற அந்தக் கும்பல் அவதானப்பட்டி ஏரி அருகே அவா்களை இறக்கி விட்டு தம்பியது.

Advertisement

இந்த நிலையில், அந்தக் கும்பலைச் சோ்ந்த ஒருவா், எருமைகளுடன் லாரியை பெங்களூரு நோக்கிகொண்டு சென்றாா். இதுகுறித்து லாரியின் உரிமையாளருக்கு ஓட்டுநா் சையத்பாஷா தகவல் தெரிவித்து, கந்திகுப்பம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.

அதன் பேரில், அத்திப்பள்ளியில் லாரி இருப்பதை அறிந்த போலீஸாா் விரைந்து சென்று, லாரியில் இருந்த 13 எருமைகளை மீட்டனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.