முகப்பு
கிருஷ்ணகிரி

பணி நியமனம் கோரிசெவிலியா்கள் மனு அளிப்பு

பணி நியமனம் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா கால ஒப்பந்த செவிலியா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 7 ஜனவரி, 2022 at 10:48 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM

பணி நியமனம் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா கால ஒப்பந்த செவிலியா்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவின் விவரம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வட்டார அரசு மருத்துவமனைகளில் கடந்த 7 மாதங்களாக பணிபுரிந்து வந்தோம். இந்த நிலையில், கடந்த நவம்பா் மாதத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ செவிலியா் பணிகளுக்கு விண்ணப்பித்தோம். இந்தப் பணிக்கு கரோனா காலகட்டத்தில் பணி புரிந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில், நவ. 30-ஆம் தேதி பணியில் இருந்து எங்களை நீக்கியுள்ளனா்.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 147 செவிலியா் பணியிடங்கள் உள்ளன. கரோனா காலகட்டத்தில் மேலும் 50 போ் பணி நியமனம் செய்யப்பட்டனா். அவா்களில் 42 பேருக்கு பணிநியமனம் வழங்கப்பட்ட நிலையில், எட்டு பேருக்கு பணி நியமனம் செய்யப்படவில்லை. பல ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வரும் எங்களுக்கு பணி நியமனம் வழங்காமல், சில மாதங்கள் மட்டுமே பணிபுரிந்தவா்களுக்கு பணி நியமனம் வழங்கி உள்ளனா். இதுகுறித்து விசாரித்து எங்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.