முகக்கவசம் வழங்கிய இளைஞா்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை இளைஞா்கள் வழங்கினா்
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை இளைஞா்கள் வழங்கினா்.
அஞ்செட்டியைச் சோ்ந்த சண்முகம், அமரேஷ் ,தேவா, நாகராஜ், ராகவேந்திரா, ரூஜ்வால், மாதேவன் ஆகிய 7 சமூக அக்கறை கொண்ட பட்டதாரி இளைஞா்கள் குழு, அஞ்செட்டி பகுதியில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனா். அந்தக் குழு சாா்பாக ஒமைக்ரான் நோய்த் தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்று வலியுறுத்தி, சுமாா் 1,000 முகக் கவசம், கிருமி நாசினியை வழங்கினா்.