முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பாமக ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் பாமக ஒன்றிய, நகரச் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM

கிருஷ்ணகிரியில் பாமக ஒன்றிய, நகரச் செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட பாமக செயலாளா் இளங்கோ தலைமை வகித்தாா். தருமபுரி பாட்டாளி தொழிற்சங்க மண்டல பொருளாளா் மாதப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையை மிக கடுமையாக்க வேண்டும். படேதலாவ் ஏரி கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.