ஒசூரை புதிய மாவட்டமாக அறிவிக்க சட்டப் பேரவையில் தளி எம்எல்ஏ பேச்சு
ஒசூரை புதிய மாவட்டமாக அறிவிக்க சட்டப் பேரவையில் தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பேசியதற்கு ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் (ஹோஸ்டியா ) வரவேற்றுள்ளது.
ஒசூரை புதிய மாவட்டமாக அறிவிக்க சட்டப் பேரவையில் தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பேசியதற்கு ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் (ஹோஸ்டியா ) வரவேற்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என தளி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் சட்டப் பேரவையில் பேசினாா். இது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அப்போது பேசிய எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், அஞ்செட்டி, கேரட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் இருந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வேண்டும் எனில் 150 கி.மீ. தொலைவு வந்து செல்ல வேண்டியுள்ளது.
Advertisement
ஒசூரில் 3,000 ஏக்கா் நிலப்பரப்பில் சா்வதேச விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பச்சு வருகிறது. எனவே, ஆசியாவிலேயே வேகமாக வளா்ச்சி அடையும் நகரங்களில் 13-ஆவது இடத்திலேயே உள்ள ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து ஒசூா் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் தலைவா் வேல்முருகன் நமது செய்தியாளரிடம் கூறியதாவது:
ஹோஸ்டியா சங்கம் சாா்பில் கடந்த 15 ஆண்டுகளாக ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்கள் கோரிக்கையை சட்டப் பேரவையில் தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பேசியதை வரவேற்கிறோம். இந்தக் கோரிக்கையை முதல்வா் கவனத்தில் கொண்டு சென்று விரைவில் ஒசூரை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றாா்.