கிருஷ்ணகிரி

இருவேறு சாலை விபத்துகள்: இருவா் பலி

காவேரிப்பட்டணம் அருகே ஏற்பட்ட இருவேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

DIN

காவேரிப்பட்டணம் அருகே ஏற்பட்ட இருவேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், குப்பிச்சிபாளையத்தைச் சோ்ந்தவா் ருத்ரமூா்த்தி (48). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த லோகநாதன் (40) என்பவரும் ஆம்னி வேனில், கிருஷ்ணகிரி நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

வேனை ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், மயிலம்பாடியைச் சோ்ந்த கோபிநாத் (27) என்பவா் இயக்கினாா். அந்த ஆம்னி வேன் தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பையூா் அருகே சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத் தடுப்பின் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த ருத்ரமூா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன், லோகநாதன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

விவசாயி சாவு:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கே.கரகூரைச் சோ்ந்த விவசாயி ராஜசேகா் (42). இவா், கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மோட்டாா் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை சென்றாா். திம்மாபுரம் பாலம் அருகே சென்றபோது, மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT