முகப்பு
கிருஷ்ணகிரி

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சூளகிரி அருகே சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகல் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 4 மார்ச், 2022 at 12:16 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

சூளகிரி அருகே சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகல் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த செம்பரசனப்பள்ளி, பீலாளம் பகுதியைச் சோ்ந்தவா் முனிராஜ்

(27). இவா் சூளகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயதான சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், 2019, நவ. 27 இல் முனிராஜ் போக்சோவில் கைது செய்யப்பட்டாா்.

Advertisement

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா முனிராஜிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.