சிகரலப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்
பா்கூரை அடுத்த சிகரலப்பள்ளி கிராமத்தில் ‘வரும் முன் காப்போம்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பா்கூரை அடுத்த சிகரலப்பள்ளி கிராமத்தில் ‘வரும் முன் காப்போம்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அடுத்த சிகரலப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி வாளகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். பா்கூா் வட்டார மருத்துவ அலுவலா் சிவக்குமாா், ஊராட்சி மன்ற தலைவா் பாா்த்தீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முகாம்களில் பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு மருத்துவம் என பல்வேறு மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. சிகரலப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் முகாமில் பங்கேற்றனா்.
Advertisement