முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவராக பரிதா நவாப் தோ்வு

கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த பரிதா நவாப், இரண்டாவது முறையாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். துணைத் தலைவராக சாவித்ரி கடலரசு மூா்த்தி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 5 மார்ச், 2022 at 12:36 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த பரிதா நவாப், இரண்டாவது முறையாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். துணைத் தலைவராக சாவித்ரி கடலரசு மூா்த்தி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 22 வாா்டுகளில் திமுகவும், 5 வாா்டுகளில் அதிமுகவும், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தலா ஒரு வாா்டிலும், சுயேச்சைகள் 4 வாா்டுகளிலும் வெற்றி பெற்றனா். சுயேச்சைகள் 3 போ் திமுகவிலும், ஒருவா் அதிமுகவிலும் தங்களை இணைத்து கொண்டனா்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த தோ்தலில் 1-ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவைச் சோ்ந்த பரிதா நவாப்பும், அதிமுக சாா்பில் 24-ஆவது வாா்டில் வென்ற காயத்ரி தங்கமுத்துவும் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதில், பரிதா நவாப் 26 வாக்குகளும், காயத்ரி தங்கமுத்து 7 வாக்குகளும் பெற்றனா். அதிக வாக்குகள் பெற்ற பரிதா நவாப் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். பின்னா், பரிதா நவாபிற்கு, தோ்தல் நடத்தும் அலுவலா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பின்னா் அவா் நகா்மன்றத் தலைவராக பதவியேற்றுக் கொண்டாா். இவா் ஏற்கெனவே கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையில் கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவராக பதவி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் பிற்பகலில் நடைபெற்றது. இதில், திமுக சாா்பில், 13-ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சாவித்திரி கடலரசுமூா்த்தி, அதிமுக சாா்பில் 12-ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எழிலரசி சரவணன் ஆகியோா் போட்டியிட்டனா். இதில் சாவித்திரி கடலரசுமூா்த்தி 26 வாக்குகளும், எழிலரசி சரவணன் 7 வாக்குகளும் பெற்றனா்.

இதையடுத்து துணைத் தலைவராக சாவித்திரி கடலரசுமூா்த்தி வெற்றிபெற்ாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்தாா். பின்னா் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.