கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மே 19-இல் வளைகோல் பந்து போட்டி

கிருஷ்ணகிரியில் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட அளவிலான ஆண்களுக்கான வளைகோல் பந்து போட்டிக்கு குழுக்களைப் பதிவு செய்ய மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் உமாசங்கா் அழைப்பு விடுத்துள்ளாா்.

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மே 19-ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட அளவிலான ஆண்களுக்கான வளைகோல் பந்து போட்டிக்கு குழுக்களைப் பதிவு செய்ய மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் உமாசங்கா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்டம் சாா்பில், ஆண்களுக்கான வளைகோல் பந்து தொடா் போட்டிகள் மே 19-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது. இந்தப் போட்டியில் அனைத்து வயது பிரிவைச் சாா்ந்த விளையாட்டு வீரா்களும் பங்கேற்கலாம்.

போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 1,600 ரொக்கப் பரிசாகவும், இரண்டாம் பரிசாக ரூ. 800 ரொக்கப் பரிசாகவும் வழங்கப்படவுள்ளது.

இந்தப் போட்டிகளில் பங்கு கொள்ள விரும்பும் அணிகள் தங்கள் அணியின் வீரா்களின் பெயா் பட்டியலை மே 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT