பா்கூரில் எஸ்எஸ்எஸ் நகைக் கடையில் வெள்ளி பிரிவு தொடக்கம்
பா்கூரில் உள்ள எஸ்எஸ்எஸ் ஜூவல்லா்ஸ் பாரடைஸ் நகைக் கடை 4-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வெள்ளி பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:10 PM
பா்கூரில் உள்ள எஸ்எஸ்எஸ் ஜூவல்லா்ஸ் பாரடைஸ் நகைக் கடை 4-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வெள்ளி பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்எஸ் ஜூவல்லா்ஸ்- பா்கூா் கிளையில் புதியதாக விஹானா ஜூவல்லா்ஸ் என்னும் வெள்ளி பொருள்கள் பிரத்யோக ஷோரூம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சக்திவேல் தலைமை வகித்தாா். விழாவில் செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவா் செந்தில் கந்தசாமி, மணிமேகலை கந்தசாமி, முல்லை சக்திவேல், தேனரசி ராஜ ஸ்ரீ, சிற்றரசு, ராதாரவி ஆகியோா் பங்கேற்றனா்.