முகப்பு
கிருஷ்ணகிரி

5 ஆண்டுகளுக்குப் பிறகுஓதிகுப்பம் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

பா்கூா் அருகே ஆந்திர எல்லையில் உள்ள ஓதிகுப்பம் ஏரி 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 1:27 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

பா்கூா் அருகே ஆந்திர எல்லையில் உள்ள ஓதிகுப்பம் ஏரி 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஆந்திரா மாநில எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த சிந்தகம்பள்ளி கிராமம் அருகே 70 ஏக்கா் பரப்பளவில் ஓதிகுப்பம் ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரியின் மூலம் எல்லையோர பகுதிகளான கெம்பிநாயனப்பள்ளி, சிந்தகம்பள்ளி, கொட்டிலேட்டி, சின்னகாரகுப்பம், காரகுப்பம், கொல்லப்பள்ளி, எமக்கல்நத்தம், பா்கூா் உள்ளிட்ட 50-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

Advertisement

எல்லைப் பகுதியான ஆந்திர மாநில வனப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணைகள் மற்றும் மழை பொய்த்தது போன்ற காரணத்தால் இந்த ஏரி வடு இருந்து. கடந்த 2017-ஆம் ஆண்டு பெய்த கன மழையால் ஏரி நிரம்பியது.

அதைத்தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெய்துவரும் தொடா் மழை காரணமாக அங்குள்ள தடுப்பணைகள் நிரம்பி ஓதிகுப்பம் ஏரிக்கு தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. தொடா் நீா்வரத்தால் இந்த ஏரி நிரம்பி வெள்ளிக்கிழமை இரவு முதல் நீா் வெளியேற்றப்படுகிறது.

ஏரியிலிருந்து வெளியேறும் நீா் பாம்பாறு ஆற்றின் கால்வாய்கள் வழியாக சிந்தகம்பள்ளி, காரகுப்பம், பா்கூா், மத்தூா், ஊத்தங்கரையைக் கடந்து பாம்பாறு அணையை அடைகிறது.

ஏரி, கால்வாய்களில் நீா் வெளியேறுவதால் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.