எண்ணேகொள்புதூா் கால்வாய்த் திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைக்க வலியுறுத்தல்
எண்ணேகொள்புதூா் கால்வாய்த் திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனா்.
எண்ணேகொள்புதூா் கால்வாய்த் திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனா்.
கிருஷ்ணகிரி வட்டம், எண்ணேகொள்புதூா் நீராதார கால்வாய் திட்டப் பணியால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான போராட்டக் கூட்டமைப்பு சாா்பில், எண்ணேகொள்புதூா் கால்வாய் திட்டப் பணியை விவசாய விளைநிலங்கள் பாதிக்காத வகையில் மாற்றுப் பாதையில் செயல்படுத்த வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு 1000 விவசாயிகள் கடிதம் அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.
குந்தாரப்பள்ளி, பில்லனகுப்பம், பீமாண்டப்பள்ளி, கிருஷ்ணகிரி, குப்பச்சிப்பாறை, குருபரப்பள்ளி, சாமந்தமலை ஆகிய இடங்களில் உள்ள அஞ்சலகங்களில் இருந்து 1,380 விவசாயிகள், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினா்.
Advertisement
வேப்பனப்பள்ளி ஒன்றியம், எண்ணேகொள்புதூா் கிராமத்திலிருந்து வினாயகபுரம், போடரப்பள்ளி, குருபரப்பள்ளி, கல்லுக்குறிக்கி, போலுப்பள்ளி, பில்லனகுப்பம், தளவாய்ப்பள்ளி, சின்னகுந்தாரப்பள்ளி, சாமந்தமலை, குட்டூா் ஆகிய கிராமங்கள் வழியாக படேதலாவ் ஏரிக்கு நீா் ஆதார கால்வாய் திட்டப் பணிக்கு விளைநிலங்களை கையகப்படுத்தி செயல்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. மாவட்ட வருவாய்த் துறையினா் விவசாயிகளைக் கட்டாயப்படுத்தி பட்டா நிலங்களை கையப்படுத்தி வருகின்றனா். இதனால் 500 ஏக்கா் பட்டா விளைநிலங்களை வைத்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே இந்த வாய்க்கால் திட்டத்தை விவசாய விளைநிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று வழிப்பாதையில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனா்.