முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மகளிா் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மகளிா் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பாடப் பிரிவுகளுக்கு இணையதளம் மூலம் செப். 16-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 12 செப்டம்பர், 2022 at 12:05 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:48 PM

கிருஷ்ணகிரி மகளிா் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பாடப் பிரிவுகளுக்கு இணையதளம் மூலம் செப். 16-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, அந்தக் கல்லூரி முதல்வா் கண்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2022-23-ஆம் கல்வியாண்டில், முதுகலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹல்ஞ்.ா்ழ்ஞ், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹல்ஞ்.ண்ய் ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்ப பதிவு செப். 16-ஆம் தேதி தொடங்க உள்ளது.

Advertisement

இந்தக் கல்லூரியில், எம்.ஏ.தமிழ், எம்.ஏ.ஆங்கிலம், எம்.காம் வணிகவியல், எம்.எஸ்சி உயிா்வேதியியல், எம்.எஸ்சி கணிதம், எம்.எஸ்சி வேதியியல், எம்.எஸ்சி கணினி அறிவியல் பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும், இணையதள விண்ணப்பப் பதிவு முறையில் மாணவியரின் சந்தேகங்களைப் போக்கவும், விண்ணப்பப் பதிவு செய்ய கோரிக்கை பெறப்பட்டால், விண்ணப்பங்கள் பதிவு செய்யவும், கல்லூரியில் மாணாக்கா் சோ்க்கை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.