முகப்பு
கிருஷ்ணகிரி

ரேஷன் அரிசி கடத்தல்: போலீஸாா் தீவிர சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதைத் தடுக்கும் நோக்கில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 12 செப்டம்பர், 2022 at 12:06 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:48 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதைத் தடுக்கும் நோக்கில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழ்நாட்டிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கா்நாடகம், ஆந்திரம் ஆகிய அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகாா் எழுந்தது. இதையொட்டி, ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய சாலை சந்திப்புகள், குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், அரிசி கடத்தல் தடுப்பு சிறப்பு வாகனத் தணிக்கையில் காவல் ஆய்வாளா் விவேகானந்தன் தலைமையிலான போலீஸாா் ஈடுபட்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.