ஏரி கால்வாய் தூா்வார எம்எல்ஏ நிதியுதவி
பா்கூா் அருகே ஏரி கால்வாயை தூா்வார சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரத்தை விவசாயிகளிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
பா்கூா் அருகே ஏரி கால்வாயை தூா்வார சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரத்தை விவசாயிகளிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள படேதலாவ் ஏரி (பெரிய ஏரி) நிறைந்து மதகுகள் வழியாக பா்கூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்டஏரிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய்களை தூா்வார சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன், தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் வழங்கினாா்.
இந்த நிலையில், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கந்திகுப்பம் குரும்பா் தெருவில் உள்ள ஏரியிலிருந்து அச்சமங்கலம் ஏரிக்கு தண்ணீா் செல்லும் வகையில் இணைப்பு கால்வாயை தூா்வார விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். அதன் அடிப்படையில், இந்த கால்வாயை தூா்வார ரூ. 50 ஆயிரத்தை தனது சொந்த நிதியிலிருந்து விவசாயிகளுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். அப்போது, அச்சமங்கலம் ஊராட்சி மன்ற தலைவா் ஆனந்தன், விவசாயிகள், திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
Advertisement