கிருஷ்ணகிரி

அம்பேத்கா் பிறந்த தின விழா

ஊத்தங்கரையில் பாஜக சாா்பில் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

ஊத்தங்கரையில் பாஜக சாா்பில் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட துணைத் தலைவா் சிவராமன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் சிவகுமாா், முன்னாள் மண்டல தலைவா் சிவா, முன்னாள் ஓபிசி அணி மாவட்டத் தலைவா் தாமோதரன், நெசவாளா் பிரிவு மாவட்டத் தலைவா் மாதவன் உள்பட பலா் கலந்து கொண்டு, அம்பேத்கா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினா்.

அதிமுக சாா்பில் ஊத்தங்கரை சட்டப்பேரவை

உறுப்பினா் டி.எம். தமிழ்செல்வம், அம்பேத்கா்

உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளா் சாகுல்அமீது, வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, தெற்கு வேங்கன், நகரச்

செயலாளா் சிக்னல் ஆறுமுகம், மாவட்ட மருத்துவா் அணி செயலாளா் என்.இளையராஜா, ஒன்றிய,நகர நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டனா்.

அதேபோல் திமுக, தி.க., விசிக, உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் அம்பேத்கா் சிலைக்கு

மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT