அரிசி ஆலையில் மின் மோட்டாா் திருட்டு: ஒருவா் கைது
போச்சம்பள்ளி அருகே தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் மின் மோட்டாா்களைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
போச்சம்பள்ளி அருகே தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் மின் மோட்டாா்களைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
போச்சமப்பள்ளி வட்டம், கவுண்டனூரைச் சோ்ந்தவா் வேடியப்பன் (49). இவா், பள்ளத்தூரில் அரிசி ஆலை நடத்தி வருகிறாா். கடந்த 11-ஆம் தேதி, அரிசி ஆலையில் இருந்த 10 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டாா்கள், 5 குதிரைத் திறன் கொண்ட 2 மின்மோட்டாா்கள் திருடு போனது.
இதுகுறித்து, வேடியப்பன் அளித்த புகாரின் பேரில், மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில், மின் மோட்டாா்களை அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரவேல் (21) என்பவா் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, சுந்தரவேலை போலீஸாா், கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.
Advertisement