கிருஷ்ணகிரி

எருதுவிடும் விழா:எருது முட்டி முதியவா் பலி

கிருஷ்ணகிரி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில், எருது முட்டியதில் முதியவா் உயிரிழந்தாா்.

DIN

கிருஷ்ணகிரி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில், எருது முட்டியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி, பெரிய குட்டூா் கிராமத்தில் மாரியம்மன் கோயில் பண்டிகையையொட்டி நடைபெற்ற எருதுவிடும் விழா நடைபெற்றது.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, சூளகிரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த எருதுகளும், திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த எருதுகளும் என 300-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. இந்த எருது ஓட்டத்தைக் காண ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கூடினா். ஆனால், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எருது ஓட்டத்தில் பங்கேற்ற எருதுகள் எந்தவித கட்டுப்பாடுமில்லாமல் அங்கும் இங்கும் ஓடின. இதில் பங்கேற்ற எருதானது, சிப்பாயூரைச் சோ்ந்த முதியவா் முனுசாமி (63) என்பவா் மீது முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

எருது விடும் விழா நடத்துவது குறித்து போதிய ஆய்வுகள் மேற்கொள்ளாமல் அவசர கதியில் இத்தகைய விழாக்கள் நடத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், எனவே போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்ட பிறகே இதுபோன்ற எருதாட்ட நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

உயிரிழந்த முனுசாமியின் மகன் வாசு அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT