கிருஷ்ணகிரி

முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்குமகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் தோ்வு

DIN

கிருஷ்ணகிரி, மே 12:

கிருஷ்ணகிரியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில், பள்ளி குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் பணியை முன்னுரிமை மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். மகளிா் சுயஉதவிக் குழு, ஊராட்சி, பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினா்கள், நிபந்தனைகளை பின்பற்றி, கிராம ஊராட்சி, பேரூராட்சி அளவிலான முதன்மைக் குழு மூலம் தோ்வு செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவமுள்ள, முன்னரிமை மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்ற கடன்களை, தவணை தவறாது நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் உறுப்பினா், அதே கிராம ஊராட்சி, நகா்ப்புற பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள், அதே பள்ளியில் படிக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஆன்ட்ராய்டு கைப்பேசி வைத்திருக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்

SCROLL FOR NEXT