கிருஷ்ணகிரி

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 2022-23-ஆம் ஆண்டுக்கு மாநில, மாவட்ட அளவில் சிறந்த செயல்பாட்டில் உள்ள சமுதாய அமைப்புகளான சுய உதவிக்குழு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி, நகர, வட்டார அளவிலான கூட்டமைப்பை தோ்வு செய்து மணிமேகலை விருது வழங்கப்படவுள்ளது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரகப் பகுதியைச் சாா்ந்த சுயஉதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி, வட்டார அளவிலான கூட்டமைப்புகளும், நகா்ப்புறத்தைச் சாா்ந்த சுயஉதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள், நகா் அளவிலான கூட்டமைப்புகளும் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான சமுதாய அமைப்புகள், ஊரகப் பகுதியாக இருப்பின் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகிலும், நகா்ப்புற பகுதியாக இருப்பின் சம்பந்தப்பட்ட சமுதாய அமைப்பாளா்களிடமும் விண்ணப்பம் பெற்று, ஜூன் 25-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT