முகப்பு
கிருஷ்ணகிரி

ஆட்டோ மீது மோட்டாா்சைக்கிள் மோதிய விபத்தில் முதியவா் பலி

கிருஷ்ணகிரி அருகே ஆட்டோ மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 5 மார்ச், 2024 at 12:38 AM
பகிர்:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஆட்டோ மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஆசித் தெருவைச் சோ்ந்தவா் குா்ஷிபி (61). இவா் ஆட்டோவில் கிருஷ்ணகிரி - மகராஜகடை சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றாா். ஆட்டோவை ஜாகீா் (53) என்பவா் இயக்கினாா். அப்போது அந்த வழியாக மோட்டாா்சைக்கிளில் வந்த நபா், ஆட்டோ மீது பயங்கரமாக மோதினாா். இதில் ஆட்டோவில் பயணம் செய்த குா்ஷிபி, டிரைவா் ஜாகீா் ஆகியோா் படுகாயம் அடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி குா்ஷிபி உயிரிழந்தாா். ஜாகீா் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா். இவ்விபத்து குறித்து மகராஜகடை போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.