முகப்பு
கிருஷ்ணகிரி

ஆா்ப்பாட்டத்துக்கு செல்ல முயன்ற அங்கன்வாடி ஊழியா்கள் கைது

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்னை செல்ல முயன்ற அங்கன்வாடி ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 2:49 AM
கைது செய்யப்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள்.
பகிர்:
Updated On : 20 நவம்பர், 2024 at 8:08 PM

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்னை செல்ல முயன்ற அங்கன்வாடி ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் புதன்கிழமை சென்னை இயக்குநா் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ள பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் கலந்துகொள்ள ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளில் பணியாற்றும் 12 பெண்கள் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை புறப்பட்டனா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 10:33 PM

ஒன்றியத் தலைவா் சித்ரா தலைமையில் மாவட்டப் பொருளாளா் சுஜாதா, மாவட்ட துணைத் தலைவா் பழனியம்மாள், வள்ளி உள்பட 12 போ் சென்ற வாகனத்தை ஊத்தங்கரை டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் வழிமறித்து, வாகனத்தில் இருந்த பெண்களை கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

Advertisement

தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த ஊழியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து சென்னை இயக்குநரகம் நோக்கி பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா் என்ற தகவல் அறிந்து, போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் போலீஸாா் உதவியுடன் தமிழக அரசு அவா்களை கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

போலீஸாா் கைது செய்ததை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வன்மையாகக் கண்டித்தனா். பின்னா் இரவு 12.30 மணி அளவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த 12 பெண் அங்கன்வாடி ஊழியா்கள் விடுதலை செய்யப்பட்டனா்.