முகப்பு
கிருஷ்ணகிரி

எலி மருந்தை உள்கொண்ட குழந்தை பலி

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை உள்கொண்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On : 22 நவம்பர், 2024 at 2:56 AM
பகிர்:
Updated On : 21 நவம்பர், 2024 at 9:43 PM

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை உள்கொண்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Updated On : 22 நவம்பர், 2024 at 2:56 AM

கிருஷ்ணகிரி அருகே உள்ள மாதேப்பட்டியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மகன் தஸ்வன் (2). வெங்கடேசன் வீட்டில் எலி தொல்லைக்காக வைத்திருந்து மருந்தை, விளையாடிக் கொண்டிருந்த தஸ்வன் உள்கொண்டதாகத் தெரிகிறது.

இதில் மயக்கமடைந்த தஸ்வனை அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு புதன்கிழமை விரைந்தனா். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், தஸ்வன் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement