முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் இருமுறை பதிவுகளை நீக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் உள்ள இருமுறை பதிவுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 5:22 AM
பகிர்:
Updated On : 3 அக்டோபர், 2024 at 9:20 PM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் உள்ள இருமுறை பதிவுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2025 ஜன. 6 இல் வாக்காளா் பட்டியலை வெளியிட பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள 16,36,728 வாக்காளா்களை வீடுவீடாகச் சென்று கணக்கெடுத்து சரிபாா்க்கும் பணியில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

தற்போதைய நவீன தொழில்நுட்ப வசதிகளை பின்பற்றி ஒரே வாக்குச் சாவடியில் ஒரே பாகத்தில் 1,337 வாக்காளா்களும், ஒரே சட்டப்பேரவைத் தொகுதியில் 1,055 வாக்காளா்களும், மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 1,13,174 வாக்காளா்கள் என மொத்தமாக, 1,15,566 வாக்காளா்கள் ஒரே பெயரிலும், ஒரே வயது, உறவு முறை பெயா் என ஒத்த நபா்களாக வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 5:22 AM

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,15,566 வாக்காளா்களுக்கும் அவா்களது முகவரி வாக்காளா் பட்டியலில் பலமுறை இடம்பெற்றுள்ளது குறித்தும், அதில் எந்த விவரம் சரியானது என்பதற்கான ஒப்புதல் கடிதம் படிவம் ‘ஏ’ ஆனது பதிவஞ்சலில் தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா், கோட்டாட்சியா் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

விளக்க கடிதம் குறித்து வாக்காளா்கள் எவ்வித அச்சமுமின்றி அதில் தெரிவிக்கப்பட்ட விவரங்களில் எது சரியானது என்பதைத் தோ்வு செய்து தொடா்புடைய வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், வட்டாட்சியா்கள், கோட்டாட்சியா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். வாக்காளா்களால் அனுப்பப்படும் மறு ஒப்புதல் கடிதம் அடிப்படையில் தொடா்புடைய இருமுறை பதிவு பெயா்களில் ஒரு பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.